ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்



செல்வ ஆதித்தன்.கு



=========================================



இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலே



கா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்





விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

சித்தன் பாட்டு : நாளைய உலகம்

சித்தன் பாட்டு


பட்டொளி வீசி
பனை சரிய

தொழுவம் பிறந்த
தேவன் புகழ் மறைய

செந்நிறம் விரும்பி
வெண்கொடை போற்றிய
-- மூடன் வழிப் புடை அழியும்

பிறை கொண்ட மக்கள்
தன் தீநெறியால் தேய


சித்தன் ஒளி மலரும்

மாந்தர் மனம் தங்கும்

ஆசை உடல் அழியும்

மாயை உலகம் தேயும்

இவன்
மனிதன்

பேய்! இது உண்மையா? பொய்யா?

Image


பேய்!
இது உண்மையா? பொய்யா?


- என் நினைவுகள் (உண்மைச் சம்பவம் )

பேய், இன்றைய நவீன யுகத்திலும் பரவலாக வலம் வரும் உண்மை, அச்சுறுத்தும் சிறிய சொல். ஆனால் மனதை உலுக்கும் பெரும் பயம்.பேய் என்ற சொல், நம் தமிழ் தாய் நாட்டில் மட்டும் அல்ல, நவநாகரீகம் என்ற பேரில் ஆடம்பரத்தையும், எதிர் நோக்கும் இயற்கை அச்சுறுத்தலையும் மறைமுகமாய் புகுத்திய ஆங்கிலேயர்களின் வீட்டிலும்தான்.

என் நினைவுகள் :

சிவா , என்னை எல்லோரும் அழைக்கும் பெயர். நான் 27 வயது முது இளைஞன் . இயற்கையும் , இறைவனையும் முழுமையாகச் சிந்திக்க முற்படுபவன். தனக்கு என்ற புது கோட்பாடுகளை வகுக்க நினைப்பவன்.

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா?

நான் பேயை நம்புகிறேனா?

கடவுள்:

இப்புவியில் கடவுள் என்ற பெயரில் பல தெய்வ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பல மதங்கள், பல தெய்வங்கள். ஆயினும் , நான் இறைவன் என்ற ஓர் சக்தியை நம்புகிறேன். நம்முள் புலப்படாத , நம்மால் கட்டுப்படுத்த முடியாத சக்தியை நம்புகிறேன்.

பேய்:........

Read More .....

Full Articles Visit : http://www.padukai.com/2009/12/devil-true-events-true-story-god-devil.html#ixzz0ZJO1XvEf


If u like to copies this post ? Pls share with my credit Link
http://www.padukai.com

Thanks