ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்செல்வ ஆதித்தன்.கு=========================================இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலேகா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்

விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

காளி... காளி...


காளி... காளி...
கற்பனைத் தாயே காளி
கட்டிவற்ற கோட்டக்குள்ள
காத்திருக்கும் காளி

கால்கள் இரண்டு
கைகள் பத்து
கூட்டி வைத்தும் காணலையோ

கழுத்து நிறைய தலைகள்
கோர்த்தும் போதலையோ

வீணாய் போன பகட்டறிவு
விலங்காய் பார்க்க விளைகிறதோ

கல்லைக் கொண்டு வடித்தாலும்
கற்றல் பெண்ணவள் புரியலையோ

பெருமை கண்டவளின்
பொறுமை காண்டு தாக்கிறீயோ

தாழாத வலி சேர்ந்தால்
தீர தாக்கல் வினை புரியாதா

வீரம் விளைந்த மண்ணில்
விளைச்சல் தானடா காளி

சிலம்பு தூக்கியவள் கண்ணகி
காலையும் தூக்குவாள் காளி

கல்லைக் காட்டி
கண்ணில் குத்தினால் புரியாதா

அறிவுகெட்ட ஜீவனே
நெஞ்சில் குத்தி மண்ணில் கிடத்தினால் புரியுமா!

கடவுள் என்பது கற்பனைச் சொல்லடா
கட்டியெழுப்பப்பட்ட சக்தியின் விழிம்படா
பகுத்தறிவாளன் வடித்த பாதையடா

கடவுள் என்ற பயம் போய்
கட்டுகள் திருடும் இடமாய்
கட்டவிழ்த்த சாதனையவிட
பதரறிவு செய்துவிட்ட தென்ன?

ஜான் வயிற்றுக்கு படியளக்காதவள்
வாளெடுத்து படையெடுப்பாளா?
பதரறிவாளனே!
பகட்டுக்கு சூடி அழகு பார்ப்பது ஏன்?
பகுத்தறிவாளரின் புதுமை புரியலையோ!
புகுத்தினாலும் தேயா வளமை தெரியலையோ!

நித்தம் நீந்துபவன்
திருநீறு பூண்டவன்
கண்டு கொண்ட கடவுள்
காணா கடவுளாக
காண்பது பகுத்தறிவா? பதரறிவா?

No comments:

Post a Comment