ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்செல்வ ஆதித்தன்.கு=========================================இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலேகா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்

விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

ஆடு ஆடு ஆளும் பூதம் ஆள ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு

ஆட்டம் கலைந்திடா
ஆடியது நினைவிலா
ஆட்டம் ஆடு

ஆட்கொள்ளும் சூழலிலும்
ஆட்கொல்லும் நிலையிலும்
ஆட அதிரவே
ஆதினம் மறையவே
ஆட்டம் ஆடு

ஆஅண்ட மேடையிலே
ஆதாய பகல்
ஆட்டம் ஆடு

ஆட்ட ஆடுபவன்
ஆட ஆட
ஆட்டம் ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு - நீளா
ஆணி அடித்து ஆடு
ஆத்மம் வெல்லாதா ஆடு

ஆட்டுபவன் ஆட
ஆத்ம நடிகனாய்
ஆடு ஆடு
ஆணி அடித்து ஆடு
ஆத்மம் வெல்லாதா ஆடு

ஆடு ஆடு
ஆட்ட ஆட்ட ஆடு
ஆள ஆடு
ஆளும் பூதங்களை
ஆள ஆடு

No comments:

Post a Comment