ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்செல்வ ஆதித்தன்.கு=========================================இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலேகா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்

விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

கடவுள் - நீங்கள் பார்க்கலாம்


கடவுள் என்பதற்கு நீங்கள் என்ன என்னென்ன உறுதிப்பாடு கொண்டிருக்கிறீர்களோ, அவை அனைத்தினையும் செய்ய வல்லான் மனிதன்.  அவன் நீங்களாகவும் இருக்கலாம், உங்களை தெளிந்து பாருங்கள்.

ஆதிக்கு ஆதி, ஆதிபராசக்தி. அச்சக்தியினை கட்டுக்குள் கொண்டவன் கடவுள், இல்லை இவள் கட்டுப்பாடுக்குள் சென்றதால் அவன் கடவுள்.

சொல்லுக்குச் சொல்லாய் சொல்ல வல்ல விடயங்கள் பலவற்றினையும் சித்தர்கள் அருளியுள்ளனர். அவற்றினை நீயும் தெளிந்து கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் நான் என்ற நாதனை அடக்கி தான் என்ற உண்மை புரிந்து சக்தியின் அருளால் வல்லவன் ஆகலாம். 

வல்லவனுக்கு வல்லானாய் சிவனை கைதொழுது காரியத்தில் இறங்கினால் ஜெயம் ஜெயம்.


No comments:

Post a Comment