ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்



செல்வ ஆதித்தன்.கு



=========================================



இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலே



கா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்





விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

பஞ்சபோகம் - panjapogam sexual enlightenment

 பதி போற்றி இருளப்பன் போற்றி ஸண்ணரம்மே போற்றி போற்றி அத்தனையும் அடக்கி ஆதி போற்றி போற்றி போற்றி .1

பஞ்சமும் பசியுமாய் இருந்தாலும் பாதகம் இல்லாமல் ஞானப்பால் அருள்பவளே ஆதி ஆதி  .2

பஞ்சமா மூலத்தின் மூலம் நீ இருப்பவை எல்லாம் நீ பஞ்சபோக ஞானத்தை அருளியதும் நீயே ஆதி ஆதி .3

பஞ்சகடிகை முடிச்சுகள் அவிழ்த்து பொருள்பட மெய்யுரைக்க துணைநிற்க வேண்டுமம்மா ஆதி ஆதி .4

பத்து ஜாமத்துள் அடங்குகின்ற போகத்தை எடுத்துரைக்க என் நாவினில் வாலை வந்தாட வேண்டும் தாயே ஆதி ஆதி .5

பஞ்சகடிகை விரித்து பேச எடுத்தெடுத்து மவுனமாய் சீரெடுத்து அருள வேண்டும் ஆதி ஆதி .6

கண்ணை குத்தி நாவை அறுத்து நூல்களை புதைத்த பகைவரை வென்றிடு காளி பஞ்ச கடிகை பேரின்ப வாழ்க்கை வாழும் மக்களை காத்திடு காளி ஆதி ஆதி .7

கட்டிய நூலெல்லாம் குருவை போற்றும் படித்தவர் குருவாகி பஞ்சபோகத்தின் உண்மை உணர்ந்து உணர்ந்து உரைத்திட வேண்டும் ஆதி ஆதி .8

கதையொன்றுமில்லை கற்பனைதானே கனவான உண்மை உறங்காமல் காத்து தூங்க தூங்க நிற்க நிற்க அளவான இன்பம் பேரின்பம் தானே ஆதி ஆதி .9

கருவறியோம் உருவறியோம் உதிக்கின்ற செங்கதிரோனையும் அறியோம் அறியோம் ஒன்றாவது அறிவோம் இருளுக்குள் இன்பம் இன்பபோகம் அறிவோம் பஞ்சகடிகை வென்று பஞ்சபோகம் அறிவோம் ஆதி ஆதி .10

கடந்த காலம் இறந்த காலம் பிறந்தவரெல்லாம் இறப்பதுஉண்டு அறிவால் அறிவர் கட்டிய ஞானம் உறங்காது தூங்கும் ஆதி ஆதி .11

காலன் வரும் நேரமெல்லாம் போர் தொடுத்து வருவான் தொடுத்த அம்பு உயிரை பிரிக்கும் முன்னே தளராத இன்பம் பஞ்சபோகம் அறிந்து ஆசை வாழ்வு வாழ்வோம் ஆதி ஆதி .12

படைத்ததெல்லாம் படைத்தாய் படையலிட்டு படைத்தாய் உண்டு உண்டு வளர்ந்தேன் உறங்கியே கழித்தேன் தாயே ஆதி ஆதி .13

பசியை மறந்து ருசியை விரும்பி விதவிதமாய் தின்று தின்று கெட்டும் அறியாது மாற்றம் மாற்றம் யென்று மாறுபட்டு உண்டு தேகம் கெடுக்கும் அறிவு யென்ன பரம்பரை அறிவோ தாயே ஆதி ஆதி .14

பக்குவமாய் சமைத்து மூன்று வேளை அளவோடு உண்டு சரியாக மலம் கழிந்தும் தீராத நோய் வந்து பற்றினால் மாறியது எதுவோ ஆதி ஆதி .15

படித்தது கேட்டது அனுபவம் யாவும் ஆய்ந்து தனக்கென வகுக்கும் தன்னிலை ஞானம் தக்க பிராயத்தில் மெய்யோடு கூட ஆதி ஆதி .16

பசிக்க புசிக்கலாம் சந்திரனோ சூரியனோ பார்த்து பண்டம் எடுக்கணும் இடதாகின் தாக பானத்தை நிறுத்தி உப்பு கசப்பு கார உஷ்ண பண்டமும் வலதாகின் தாக பானம் தித்திப்பு துவர்ப்பு புளிப்பு ஆநெய்பால் பண்டமும் ஆதி ஆதி .17

பண்டம் எதுவாயினும் பாதி வயிற்றுக்கே உண்ணவேண்டும் மீதி பாதியில் காற்று பாதி ஓடும் கடைபாதி இடத்தை நீருக்கே கொடுத்து வைக்கணும் ஆதி ஆதி .18 

பசித்திருந்தால் போகம் அறியலாம் பட்டினிகிடந்தால் ஏது கிட்டும் பறவைக்கு கிடைப்பது நடப்பார்க்கு கிடையாதா தாயே ஆதி ஆதி .19

கணக்கு பார்க்க நேரமில்லை வரவுசெலவு தெரியவில்லை கையிருப்போ ஏதுமில்லை கவலை கொண்ட மனிதரெல்லாம் மோகம் தன்னை அறிவதில்லை ஆதி ஆதி .20

காலையெழும் சூரியன் வலநடை போடுவான் சந்திரனோ காற்றை உசுப்பி இடநடை போடுவான் காலனோ பூதத்தை ஓட்டி கணக்கை எழுதுவான் கணக்கெழுதுவான் கணக்கறிந்து நடப்பாரே ஆதி ஆதி .21

கணக்கை அறிந்தாலும் காற்றை பிடிக்க முடியுமோ காலை கதிரவனோடு காலுண்டு அனலியோடு அன்னமுண்டு இரவியோடு பானமுண்டு பாதி வயிற்றில் காற்றை ஓட்ட ஓடுவது ஓடட்டும் பார்ப்பவர் எழுதட்டும் ஆதி ஆதி .22

கடல் வீசும் காற்று கண்ணீர் காற்று மலர் வீசும் பூங்காற்று இளம் வேனில் தென்றல் காற்று விரும்புவது ஓ ஐந்திலும் கலந்த போகக் காற்று அதிகாலைக் காற்று மகிழ்ந்து ஈர்த்து மாற்றி அனுப்பும் சுவாசம் காத்து ஆதி ஆதி .23

காத்து இருந்து காத்திருந்து காலக்கணக்கை அதோடுவிட்டு ஐந்து நாழிகை நாள்தோறும் நாடும் எண்ணங்களை தள்ளி தள்ளி விரும்பியதை சுவாசித்து வாசித்து சித்து கேட்க கேட்க சித்து வாசித்து சுவாசித்து கிடைக்க கேட்க ஆதி ஆதி .24 

கணக்கோடு கணக்காய் இருவர் சேர்ந்து கலவி கற்பார் தின்று தொய்யாது உறங்கி சாவாது அரசபோகமாள பஞ்ச நடையறிந்து பிறை பின்னே சுற்றி சுற்றி சதிக்குள் வீழ்ந்திடாமல் விதியே கதியென்று போகம் வெல்வார் ஆதி ஆதி .25 

பார்த்ததும் கேட்கும் நாவும் பழகுமே வாசம் பழகுமே பார்க்க பார்க்க சுவாசமும் பழகுமே அங்கம் பழக ஐயமும் பழகுமே அன்னத்தை பார்க்க யாவும் பழகுமே ஆதி ஆதி .26

பார்க்க பார்க்க சந்திரனோ சூரியனோ காணாது காணலாமே கேட்க கேட்க கேளாமல் கேட்கும் உள்ளத்தின் உணர்வுதனை யார் அறிவார் பார்க்க பார்க்க வாசமும் வசப்படுமே ஆதி ஆதி .27 

பார்ப்பவர் பார்க்க பாசமும் நேசமும் கண்திறந்து பார்க்க தெரியாதோ சிற்றின்பமே விரியும் பேரின்பமே அறியாயோ தன் தாகம் அறியாயோ தக்க துணை அறியாயோ ஆதி ஆதி .28 

படிக்காமல் படிக்க பார்வைகள் நெகிழ பிரம்மமும் சார்ந்து சமைத்திடுமோ சாரம் சம்போகம் பத்ய பஞ்ச போகம் தாம்பத்யமே தந்திடுமே பேரின்பம் ஆதி ஆதி .29 

படிநிலையோ பக்குவமோ அறியா போகம் போகுமே வேகம் கற்பனை மோகம் நொடியினில் சாடும் காலத்தை மிஞ்சும் கவிநிலை பேசும் பேசிடாதே காணாத இன்பம் ஆதி ஆதி .30 

பல்லாண்டு பல்லாண்டு படியே கதியென்று பதியே விதியென்று சிந்தையெல்லாம் சித்து வாசித்து சுவாசித்து வாசம் பாசம் பார்த்து கற்பனை கண்ணாலே படிநிலை ஏற ஏற விழாமல் ஏற ஆதி ஆதி .31 

நயமாய் பேசுவார் நாடுசுற்றி படித்தோமென்பார் நன்மைதனை எடுத்துரைப்பார் நாட்டியது நாடிப்பார்த்தால் நாட்டுக்கும் ஆகாது நடுவுக்கும் நிற்காது நாடாமல் ஆயாமல் நம்பி நஞ்சாகாதே நற்கதி பேசும் நல்லவர் சூட்சமம் தேடு தேடு ஆதி ஆதி .32

நல்லதோ கெட்டதோ கேட்டதோ பார்த்ததோ நாடி நாடி கேள்வியாக்கி நான்கு திசையும் தேடி தேடி ஓடி ஓடி தானாய் விரும்பி தன்னையே கொடுத்து தன் துணை தேடும் தக்க பிராயம் கற்குமே நம்பி தும்பிக்கை அறியாது ஆதி ஆதி .33 

நமனை நம்பினாலும் நம்பலாம் ஊர்உலகை நம்பலாமோ கற்பனையே யென்றாலும் தெள்ளத் தெளிவுற வேண்டாமோ வகையாய் வடித்து இயல்பாகவே போதனை செய்தாலும் கண்ணார கண்டாலும் கண்ணான கண்ணே கற்பனை மனமே சிந்தனை செய்வாய் ஆதி ஆதி .34 

நரம்போடு நாளமும் எழும்போடு தசையுமாய் மூக்கோடு முழியுமாய் யாவரும் ஒன்றாயினும் நல்லவர் கெட்டவர் அறிவர் அறியாதவர் வஞ்சகர் அறிவாய் அகமே அரிஅறி கனவோடு கனவாய் உரையாடி தெளிவான காட்சியும் கண்டு காலனோடு உருட்டி நலனே கற்பாய் பேரின்பமே ஆதி ஆதி .35 

நல்லபாம்பென்பார் தலையில் வைத்து கொண்டாடுவார் நடுவீடு வந்தால் அடித்தே கொல்வார் காணாயோ வில்வீரா அம்பு தவறினால் வீழ்வாய் அறியவே சிற்றின்பமோ பேரின்பமோ நடுவான இன்ப கணக்கறியார் சாவார் போகவாசம் அறியட்டுமே ஆதி ஆதி .36 

நகர வாழ்க்கையில் நஞ்சுண்டு நடிநடைகண்டு தெளிவில்லாமல் சிற்றின்பத்தை மகிழ்ந்து கொண்டாடுவோம் ஆசை குதிரை பின்னாலே ஓடுவோம் பரிவேகம் தெரியாமல் கற்பனை காட்சியும் காணாமல் காலக்கணக்கும் பாராமல் ஆதி ஆதி .37

நண்டோட நரியோட நாட்டத்தோடு நானுமோட நரி விருத்தம் கண்டு வியந்தேனே ஆனையும் பாம்பும் வென்ற வீரனும் கிடக்ககண்ட நரி நாவினில் நீர் வடிந்தும் கவ்வாது சேமித்து வில்குதையை கவ்வி மாண்டதே மாண்ட நரி தந்திரம் பாரு சேமித்து மகிழும் பஞ்சபோகம் பாரு நிலையில்லா வாழ்வில் நிலையான விதியை பாரு ஆதி ஆதி .38 

நதியோடுது வளைந்து நெளிந்து ஆறோடுது செந்நீரும் ஓடுது பள்ளமோ மேடோ ஓடுது நீர் ஓடுது இல்லாது இல்லையே சிற்றின்பமே ஆதி ஆதி .39 

நகநக அகநக மனமே இறங்கிடும் சிறுதுளி அடங்காது பெருமழை ஓடும் ஓடுமோ பனிதுளி அகநகக காகக பறக்குமே சீதம் சுழலுமே கீதம் காகக அகநகக ஆதி ஆதி .40

நட்டவர் நாடி நடுவாக பேசி பேசி மெல்ல மெல்ல சுடசுட வெண்நீர் கல்லாகும் பிடித்த மண் கூடுவிட்டு கூடு பாயாது அகநகக காகக நீராவி ராவி ஆவி கற்க பஞ்சபோகம் ஆதி ஆதி .41

மண்ணுக்குள் இருப்பதும் இருளுக்குள் இருப்பதும் வளருமே ஊட்டமான நீர் இருக்க மேன்மையாக வளருமே மறை பொருளும் தெரியுமே மனமும் தெளியுமே நற்குணமும் விரியுமே ஆதி ஆதி .42 

மண்ணாளும் மன்னரும் மயங்கிடுவார் சிற்றின்ப போதையில் மக்கள் ஏதாவார் இருளுக்குள் சிக்கி கல்லாதவர் வீழ்ந்திடல் ஆகுமோ ராவி போகம் கற்க வேண்டாமோ கருமை தெளிதல் வேண்டாமோ ஆதி ஆதி .43

மதயானையும் மனமந்தியும் கொண்டாடுமே இருளில் விளையாடி தன்னை உணர தானே எழுந்திடும் தன்னுயிர் தன்னை காணலுமாமே தன்துணை தானே ஆதி ஆதி .44

மலைமாடு மடுமலைதேடு உச்சத்தின் மேலே தவழும் மேகம் தவித்திடும் தாகம் கீழே அடங்கிடும் நடுவான குகையே காககககக அகநக மதத மறைப்பினும் மாது மாதவி வேறு காவலன் தானே விரிந்தது எல்லை விரியாத முல்லை ஆதி ஆதி .45

மலர்ந்தது மனமே மல்லிகை மணமே வீசிடும் எங்கும் அகலாது இங்கும் அங்கம் மிளிர கால் நடையும் மனமணமே ஈர்த்திடும் வண்டை நிகழ்த்திடும் சாதனை இருந்தே சாவும் இல்லமும் தொடரும் கோகுலம் ஆக ஆதி ஆதி .46

மந்திரம் கருஉரு சொல்திறம் பிறப்பிடம் நடுவான ஆதித்தன் இருப்பிடம் இருளான இருளுக்குள் ஆழ்ந்து பார்க்க பார்க்க பபபப தெளிய தெளிய தெரிவிக்கும் லஸ்வி தன்துணை வெளிச்சம் தெரிவிக்கும் தெளிய தெளிய பபபப முதல் மொழி தன் வழி ஆதி ஆதி .47

மறைவான மாங்கனி மறைபொருளோ மரத்தின் உரிப்பொருளோ தன்னை கொடுக்க தானே கிடைக்கும் தவப்பொருளோ பசிபோக்கும் மெய்ப்பொருளோ உள்ளதை உள்ளபடி பார்க்க பார்க்க உள்ளத்தை பார்க்க ஒன்றான லஸ்வி ஆதி ஆதி .48

மடம் மடமாய் உலாவி உள்ளத்தை உற்ற துணையாகக் கொண்டு உள்ளதை தேடி உல்லாசமாய் ஊர்சுற்றி மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே ஓடி விளையாடும் அலைகடல் போல திரும்ப திரும்ப பொழுதினை பார்க்க காலம் புரியுமோ மோகம் தணியுமோ ஆதி ஆதி .49 

மருதமோ முல்லையோ சங்கம் கொடுத்தது விவாதம் வேண்டாம் பிழைப்புக்காய் கோடி நூல்கள் உண்டு தனக்காய் கருப்பொருள் உண்டு தானே பேசிட தத்துவம் வகுத்திட சூத்திரம் அகத்தில் எழுமே தன் வழி இன்பம் தங்கமாய் மாற்றும் பொதுவெளி பேரின்பம் ஆதி ஆதி .50

வட்டப்பாதை வாழ்க்கை பாதை நெடுவழி போகும் பாதை காணாததுபோல் காண விரும்பும் சொந்த பாதை வந்த பாதை முகவழியே போகும் கரும்பாதை கண்டாலும் தெரியாது காட்டினாலும் தெரியாது அவமில்லை கேளு எதார்த்தமாய் பேசு அகத்தை பேசு அறியலாமே பாதி ஆதி ஆதி .51

வருவதும் போவதும் வழிப்பாதை வகுக்குமோ மாற்றுமோ குழப்புமோ தன்வழியே போகுமோ ஸண்ணறம்மே தன்துணை தானே தோன்றியதை பார்த்தேனோ நினைக்க தோன்றியதோ தோன்றியது நினைத்தோ பார்த்தோ பார்வைகள் பரிமாறுவதை பேசலாமே பேசிட வேகம் வேண்டாம் ஓட வேண்டாம் நடக்க வேண்டாம் குழந்தை போல தவழ்ந்து மாறலாம் தவமே ஆகலாம் பேசி பேசி ஆதி ஆதி .52 

வட்டக்கிணறு வற்றாதகிணறு ஆழக்கிணறு அற்புதக்கிணறு புலப்படுமோ புறத்திணையில் அறிவதுயேது அகத்திணையில் பேசு பேசு அருவத்தை பேசு சிந்தனையில் செதுக்கி புறநலன் காத்து பொறுமையாய் தன்துணை உண்மை பேச உருவகம் நாடி அர்த்தமாய் பேசலாமோ ஆதி ஆதி .53 

வடிவமாய் வந்த கதை எந்த கதை வருகிறது புதுக்கதை சொல்ல முடியா தன்கதை கிறுக்கியது காலாலோ கையாலோ திரும்பி பார்க்கையில் பேசியதே ஓவியமாய் தன்னகத்தே தாவுவது போகாமல் வந்ததே வந்தது தாவி போகாதோ நல்லதை பேசிடாதோ ஆதி ஆதி .54

வழிமரபு மறந்ததோ வாழ்க்கை முறை மாற்றியதோ வஞ்சகம் சிதைத்ததோ நாதம் உள்ளிருக்க நாவும் பழகாதோ அட்சரம் யாவும் சொல்லாகி தொடராகி வழித்துணை வந்திடாதோ தன்துணை பேசாதோ போகும்வழி பொதுவெளி பெருவழி காட்டாதோ ஆதி ஆதி .55

வத்தாத ஞானமே மாமனமே நகையாய் மகிழ்ந்து சிரித்து வசித்துவமாய் யந்திர ஐந்திரம் ஒன்றாகி ஓசையாய் நாதகீதமாய் பக்குவமாய் பதிலுரைக்கவே பாகம் பழகுமே ஆதி ஆதி .56

வறுவறு வறுக்க வறுக்க கருவாமல் வறுத்தெடுக்க பக்குவம் மிதமான வெப்பம் போதுமே போதும் வாசனை போதும் நகையோடு நல்மனதோடு பேசுவதே சுகம் சுகம் சுகபோகம் போகும் மோகம் தவிர்த்திடு தள்ளிடு புன்னகை பூத்திடு ஆதி ஆதி .57

வல்லவர் நல்லவர் பசியோடு பேசுவார் பசியடக்கி பேசுவார் செப்பும் நாவும் சிவக்க காரவெற்றிலை மணக்க வாழையடி வாழையாய் வந்தகத ஆனக்கத மறக்காத மேல்கத பேசுவதை நிறுத்தாமல் பேசு நற்பதிலோட பேசு ஆதி ஆதி .58

வடிதலும் வழிதலும் வளிகாணு முன்னே வழிகாட்டும் கதைத்தலை தழைத்து தளைத்து வலித்து நிலைத்து நிற்க பஞ்சகடிகை பாதபூசை வார்த்தை ஜாலம் புன்னகை கோலம் பூத்திடும் மாயம் மெய்யுரைக்க கதைக்க ஆதி ஆதி . 59

அண்டம் பெரிது வாய் பெரிது அதனினும் பேச பேச காக்கும் மெளனம் பெரியது அன்போடு பேசி நலமாய் உரையாடி விடியும் சம்மதம் பெரிது பெரிது ஆதி ஆதி .60

அங்கத்தின் உள்ளே அகத்தின் ஆழத்தை அரியும் வெளியே புறத்தின் தொலைவை அயனும் நோண்டி நோண்டி ஓடி ஓடி அங்கம் பெரிதானதே சிவமோ சவமோ ஆடும் ஆற்றலோ யார் அறிவார் நடுவான சம்மதம் ஆதி ஆதி .61

அவரவர் ஆசையும் அகத்தில் விரியும் எண்ணமும் மூலமறியும் காலம் முடிவான காலமறிந்து அன்பை தேடி ஈருயிர் ஆருயிர் நாடும் சம்மதம் ஆசை ஆசான் ஆக சம்மதம் ஆக பேரின்பம் தானே ஆதி ஆதி .62

அன்பே உருவான சம்மதம் அறிவால் உருவாகிய சம்மதம் யார் அறிவார் அறிவார் கண்கள் காணுமே தொலைதூரம் தொடங்கிய தூரம் ஒன்றான வட்டம் ஆதி ஆதி .63

அகரமோ உகரமோ மகரமோ நானறியேன் கண்ட கல்லோ கண்காணா காயமோ காணாத ஆகாயமோ நானறியேன் அறியும் சம்மதம் சூழல் யாவும் சம்மதம் அன்பே ஆதி ஆதி .64

அரிது அரிது ஏது அரிது பிறப்பு அரிதோ பேரின்பம் அரிதோ அரிதான சம்மதம் இல்லாமல் குறுகிய இன்பம் அரிதோ பஞ்சபோகம் அரிதோ அரிது புரிதல் அரிது ஆதி ஆதி .65

சத்தியம் காப்பது சம்மதம் காப்பது பிறழாத வாக்கு ஆடும் நாவை ஆட்டுவிக்கும் நாபி நளினமாக எழுப்பும் சப்தம் நர்த்தனமாகும் சாட்சியாய் சத்தியம் காக்க அகவழி புறவழி நேர்த்தியான நடுவழியே சேரும் புரிதல் ஆதி ஆதி .66

சரித்திரம் பெரிதோ சமுத்திரம் பெரிதோ அவனும் அவளும் அடையும் ஊடல் அழகோ கூடல் அழகோ அகமே வளிவெளி வாக்காய் நேர்த்தியாக அடையும் அகமே அகத்தை பிணைக்கும் புரிதல் ஆதி ஆதி .67

சட்டம் வகுப்பது விதியை மதிப்பது ஏகாந்தமல்லோ மதியும் நினைப்பது கனவில் கூடும் பதிபோல பசுவும் கூட புரிதல் வேண்டுமே அகபுறமே ஆதி ஆதி .68

சகமே ஆனாலும் அடுத்து என்ன எண்ணம் அறியேன் அகபுறம் அறியேன் அறிவேனோ அம்மையப்பன் புரிதலோ தந்தைதாயும் அறிதலோ பஞ்சபோகம் புரிதலோ அறிதலோ வேண்டும் புரிதல் ஆதி ஆதி .69

சந்ததி சரிவர சம்மதம் எம்மதம் தும்பிக்கையான் திருமேனி அறுகும் பார்பாதம் மாமலராள் பூதுப்பும் அருக நோக்க நோ அறிதல் புரிதல் பஞ்சபோகமே ஆதி ஆதி .70

சங்கரன் முதலே யாவரும் சொல்வார் நம்பிக்கையே புரிதலும் நம்பிக்கையே நீரும் நெருப்பும் படியளப்பதும் நம்பிக்கையே முரணாய் சதியே சல்லாப கிளியே சங்கடம் வேண்டாம் உந்தன் இயல்வாழ்க்கையே எந்தன் குருவே ஆதி ஆதி .71

தங்கமே மேநகயே புரிந்தது புரியாதது நம்பிக்கையே புரிதலும் நம்பிக்கையோ விட்டு கொடுப்பதோ கொடுப்பது தர்மமே கொடுக்கலாம் விட்டு கொடுக்கலாம் தர்மம் புரிந்தால் சம்மதம் ஆதி ஆதி .72

தர்மம் தலை காக்கு மென்பார் தலையேது வாலேது தலையானதேது பிடித்ததோ விட்டதோ கொடுத்ததோ கொடுத்ததே விருப்பமும் இல்லாமல் கொடுத்து ஆட்கொள்ளும் தர்மம் விட்டு கொடுப்பதே ஆதி ஆதி .73


±+±++++++±+++++±+++++++±++++++±++++++++±+±

ஆதி அருள அருள எழுதியவர் அவனே குமாரசாமி பிள்ளை இளையான்

No comments:

Post a Comment