ஆதி மந்திரம்


இல்லை இல்லை
இல்லை என்பதில்லாமல் எதுவுமில்லை
இருப்பதில்லாமல் இல்லையும் இல்லை
இல்லை இல்லை


ஆதி தாயே
இல்லா இருப்பே
அருள்வாய்
இல்லா இருப்பே
ஆதி தாயே


இல்லா நீயிருக்க
இருக்க நானிருக்க
இல்லாதது உண்டோ
இவ்வுலகில்
இல்லாதது உண்டோ
இருக்க நானிருக்க
இல்லா நீயிருக்க


அத்தனையும்
அருளப்பெற்றேன்
ஆதி
அருளப்பெற்றேன்
அத்தனையும்



செல்வ ஆதித்தன்.கு



=========================================



இருப்பதுவும் எதுவுமில்லை
இழப்பதும் எதுவுமில்லை
உன்னுள் கண்டால்
இழப்பதும் எதுவுமில்லை
இருப்பதும் எதுவுமில்லை


பாரினிலே
பாரப்பா பார்
தந்திரம் கற்றார்
மந்திரம் விட்டார்
தாயை மறந்து
மந்திரம் விட்டார்
தந்திரம் கற்றார்
பாரப்பா பார்
பாரினிலே



கா கா காகம்
கையிலாய வர்க்கம்
கண்டு தெளிந்தார்
பூரணம்
கண்டு தெளிந்தார்
கையிலாய வர்க்கம்
கா கா காகம்





விட விட வீடு
விட்டயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
உயிரற்றுப் போனயிடம் வீடு
கட்டினவர் கட்டுவாரே பார்
உயிரற்றுப் போனயிடம் வீடு
உறங்கிப் போனயிடம் வீடு
விட்டயிடம் வீடு
விட விட வீடு


தவம் இருப்பார்
தவறு காண்பார்
தப்பிக்க நினைப்பார்
தட்டாது நின்று
தப்பிக்க நினைப்பார்
தவறு காண்பார்
தவம் இருப்பார்

புலம்பல் பா

 சம்மதம் சில புரிதலுக்கு ஆதாரமாகும் 

புரிதல் சிலவற்றை விட்டு கொடுக்க தயாராகும் 


கொடுத்தல் பலவற்றை பெற வெறுமை கொள்ளும் 


வெற்றிடம் மனதில் போராட்டத்தை ஏற்படுத்தும் 


போராட்டம் நீதிபதி தேடும் 

குழப்பத்தில் 


நீதிபதி தான் தானே.. அல்லாது எல்லாம் இழக்கும் மனம்


தன் இன்பம் யார் அறிவார் யார் 


யார் ஆட்டுவது யார் 

ஆடுவது யார் 


ஆட்டுவது சுவாசம் 

ஆடுவது வாசம் 

அறியாதது தேகம் 


சுவாசம் நாடி வாசி பிடிக்க 

பரியங்கம் தானே ஆடும் 


 அங்கம் அறியார் 

அறி யார் அரி


அரி அமுதம் அறி

அளவான ஆளறி 


அமுதம் சுரக்கின்ற

 பதி அறி


பதி தேடும் நான் 

புலம்பும் பா அறி


16 07 2025

9.34

No comments:

Post a Comment